Wednesday, May 27, 2015

நடிக்கலாமா? படிக்கலாமா? யோசிக்கும் லட்சுமி மேனன் - Cineulagam
பள்ளியில் நடித்துக் கொண்டிருந்தாலும் பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருப்பவர் லட்சுமி மேனன். படப்பிடிப்புக்கு ஓய்வு விட்டு பள்ளி பரீட்சையில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றதும், லட்சுமி மேனன் நடிப்பதில் முழு கவனத்தையும் செலுத்துவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் லட்சுமி மேனனுக்கு படிப்பை விட விருப்பமில்லாமல் கல்லூரியில் சேர்ந்து படிக்க திட்டமிட்டுள்ளார். கொச்சியில் உள்ள பிரபல கல்லூரியொன்றில் சேர முடிவு செய்துள்ளார்.
ஆங்கில இலக்கியம் அல்லது பேஷன் டெக்னாலஜியை பாடமாக எடுத்து படிப்பார் என கூறப்படுகிறது. பேஷன் டெக்னாலஜி சினிமாவுக்கு உதவியாக இருக்கும் என கருதுகிறார். ஆங்கில இலக்கியம் எடுத்தால் சரளமாக எல்லோரிடம் பேசி பழகலாம் என்ற எண்ணமும் இருக்கிறது.
எனவே இரண்டில் எதை தேர்வு செய்வது என்று தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

0 comments:

Post a Comment