Wednesday, May 27, 2015

லிங்கா விவகாரம்: விநியோகஸ்தர்களுக்கு பதிலடி கொடுத்த தாணு - Cineulagam
லிங்கா பட நஷ்ட விவகாரம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. நேற்று திடீரென்று பத்திரிகையாளர்களை விநியோகஸ்தர்கள் சந்தித்து ”இது வரை கொடுக்க வேண்டிய பாக்கியில் பாதி கூட இன்னும் கொடுக்கவில்லை” என்று புலம்பி தள்ளினர்.
இந்த விவகாரத்தில் நேரடியாக ரஜினி தலையிட்டால் தான் பிரச்சனை முடியும், மேலும் கலைபுலி தாணு பணத்தை எங்களுக்கு தரவிடாமல் செய்கிறார் என்று குற்றம் சாட்டினர்.
இதனை அறிந்த தாணு, ”முதலில் விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களுக்குமிடையே ஒற்றுமை இல்லை! இருதரப்பும் சமாதானம் அடைந்து எங்களிடம் ஒற்றுமையாக வந்து பணம் கேட்டால் தருவோம்” என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment