தமிழ் சினிமாவில் 8 ஆண்டு காலம் கழித்து மீண்டும் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் ஜோதிகா.
இப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடைய அதுவும் பெண்களிடைய அமோக வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் படத்தில் வெற்றி சந்திப்பு தற்போது நடந்து வருகிறது, அதில் ஒரு பத்திரிக்கையாளர் ஜோதிகாவுக்கு நடித்ததற்கு சம்பளம் கொடுத்தீர்களா என்ற கேள்விக்கு சூர்யா பதில் அளித்தார்.
சம்பளம் வாங்காமல் தான் 36 வயதினிலே படத்தில் நடித்தார்கள் இன்னும் வார நாட்களில் கொஞ்ச கொஞ்சமாக கொடுத்துடுவேன்.
ஆனால் கண்டிப்பா தற்போது முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளம் தான் கொடுப்பேன் என்று ஜாலியாக தெரிவித்தார்.
0 comments:
Post a Comment