Tuesday, May 5, 2015

அரண்மனை 2-இல் நடிக்கின்றேன்
திரிஷாவுக்கும் வருண் மணியனுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திடீரென இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணம் ரத்தாகி விட்டதாக பேசப்பட்டு வந்தது.
அதற்கேற்றார்போல், திரிஷா வரிசையாக படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
எனினும் இத்தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய திரிஷா, அரண்மனை 2 படத்தில் சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளதாக டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்.
இந்த சிறப்பான நாளில் முதல் முறையாக சுந்தர். சி இயக்கத்தில், சித்தார்த்துடன் இணைந்து "அரண்மனை 2" படத்தில் நடிக்க உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறேன் என தனது டுவிட்டரில் திரிஷா குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment