Friday, May 1, 2015


சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய 'மாஸ்' படத்தின் ரிலீஸ் தேதி மே 15 எனவும், ஆடியோ ரிலீஸ் தேதி மே 3 எனவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் சூர்யா தற்போது விக்ரம் குமார் இயக்கி வரும் '24' படத்தில் பிசியாக உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கவுள்ள ஹரி தற்போது தயார் நிலைக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சிங்கம், சிங்கம் 2 படங்களுக்கு பின்னர் ஹரி, சிங்கம் 3 என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டு லோகேஷனை பார்த்து முடித்துவிட்டு வந்த ஹரி, திரைக்கதை அமைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தார். தற்போது முழு திரைக்கதையையும் அவர் முடித்துவிட்டதாகவும், படத்தின் ஆரம்பகட்ட பணிகளை வரும் மே முதல் வாரத்தில் இருந்து அவர் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிங்கம் படத்தின் முதல் இரண்டு பாகங்களில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த அனுஷ்கா மூன்றாம் பாகத்தில் நடிக்கவில்லை என்ற செய்தி வெளிவந்துள்ள நிலையில் ஹீரோயினை தேர்வு செய்யும் பணியில் ஹரி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல் இரண்டு பாகங்களை போலவே விறுவிறுப்பான போலீஸ் கதையாக உருவாக இருக்கும் சிங்கம் 3, கண்டிப்பாக சூர்யாவின் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment