ஜோதிகாவின் '36 வயதினிலே' ரிலீஸ் தேதி
எட்டு வருடங்களுக்கு பின்னர் ரீ எண்ட்ரி ஆகியுள்ள ஜோதிகா நடிப்பில் தயாராகியுள்ள '36 வயதினிலே' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டாகியுள்ளது. குறிப்பாக 'வாடி ராசாத்தி' என்ற பாடல் அனைத்து தனியார் எப்.எம் வானொலிகளில் அடிக்கடி ஒலிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மலையாளத்தில் வெளியான 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' என்ற படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமான இந்த படத்தை மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார். ஜோதிகாவுடன் ரகுமான், அபிராமி, தேவத்ர்ஷினி, நாசர், டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் '36 வயதினிலே' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மே 15ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தேதியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த சூர்யாவின் 'மாஸ்' திரைபப்டம் மே 29ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment