Sunday, May 3, 2015


சிம்புவின் வாலு படத்தின் ரிலீஸ் தேதி மறுபடியும் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவை திரையில் காண அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் இச்செய்தி அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பல படங்கள் நல்ல முறையில் தயாராகி வெளியாகும் நிலையில் சிக்கலில் இருந்த போது அதை சுமூக பேச்சுவார்த்தையால் தீர்த்து வைத்து வருபவர் சரத்குமார், அதற்கு உதாரணமாக உத்தம வில்லன், கொம்பன் படங்களை கூறலாம்.

சமீபத்தில் டுவிட்டரில் சரத்குமாரிடம் ஒரு ரசிகர், வாலு பட ரிலீஸ் பற்றி கேட்டுள்ளார். அதற்கு சரத்குமார் தயாரிப்பாளரிடம் பேசியுள்ளதாகவும், படம் மே 15ம் தேதி வெளியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சரத்குமார் உத்தமவில்லன் படத்திற்காக 27 மணிநேரம் தூங்காமல் உழைத்தது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment