கெளதம் மேனன் படத்தில் நடிக்க மறுக்கும் ஹீரோயின்கள்
கௌதம் மேனன் தற்போது அச்சம் என்பது மடமையடா என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். இதில் திரிஷா நடிப்பதாக இருந்தது. பின்னர் பல்லவி சுபாஷ் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
படப்பிடிப்பில் கலந்துகொண்ட சில நாட்களிலேயே கௌதம் மேனனுக்கும், பல்லவிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. கேட்ட தேதிகளை ஒதுக்கி தரமுடியாததால் மோதல் முற்றியது. இதனால் பல்லவி இந்த படத்திலிருந்து நீக்கப்பட்டார்.
இதே படத்தை கெளதம் மேனன் தெலுங்கிலும் இயக்குகிறாராம். இதில் சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவை அணுகியுள்ளனர். அவரும் பல்லவியை போலவே பிடிகொடுக்காமல் நழுவியுள்ளார். வேறு படங்களில் நடிப்பதால் அவைகளை முழுமையாக நடித்துக் கொடுக்காமல் பாதியில் வருவது சரியாக இருக்காது. ஸாரி என ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு சமந்தா எஸ்ஸாகி விட்டாராம்.
இதில் அப்செட் ஆன கௌதம் இவர்களை விட புதுமுக ஹீரோயினே மேல் என்ற நிலைக்கு வந்துவிட்டாராம். சமீபத்தில் ஒரு வடக்கன் செல்பி மலையாள படத்தை பார்த்த கெளதம் மேனனிற்கு அதில் ஹீரோயினாக நடித்திருந்த மஞ்சிமா மோகனின் நடிப்பு பிடித்திருந்ததாம். உடனே அவரை அழைத்து பேசியுள்ளார். கௌவுதம் மேனன் படம் என்றதும் மறுபேச்சு பேசாமல் மஞ்சிமா ஒப்புக்கொண்டாராம்.

0 comments:
Post a Comment