Sunday, May 17, 2015


கிம் கர்தஷியான் தும்மினாலும் கூட பரபரப்பாக பேசப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது அவர் தனது கவர்ச்சியை மீண்டும் ஒரு முறை பளிச்சிட வைத்துள்ளார் ஒரு அனல் பறக்கும் போட்டோ ஷூட் மூலம். வழக்கம் போல இதுவும் ஒரு நிர்வாண புகைப்படத் தொகுப்புதான்.

கிம் பங்கேற்கும் கீப்பிங் அப் வித் தி கர்தஷியான் நிகழ்ச்சிக்காக இந்த நிர்வாண போட்டோ ஷூட்டை பாலைவனத்தில் வைத்து நடத்தியுள்ளார் கிம். பாலைவனத்தின் நடுவே நிர்வாணமாக காட்சி தரும் கிம், தனது முக்கிய உடல் அங்கங்களை வெள்ளை நிற பெயின்ட்டால் பூசி மறைத்துள்ளார். இந்த போட்டோ ஷூட் மிகவும் அழகாகவும், தன்னம்பிக்கை தருவதாகவும் தனக்கு அமைந்ததாகவும் கூறியுள்ளார் கிம். மேலும் இதை கலைநயத்துடன் கூடியதாக திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார் கிம்.

தனது நிர்வாணத்தை மிகவும் கூலாகவும், அழகாகவும் படம்பிடிக்க திட்டமிட்டதாகவும், தான் நினைத்தது போலவே அது வந்திருப்பதாகவும் கூறுகிறார் கிம். கிம்மின் மகள் நார்த் வெஸ்ட்டுக்கு அடுத்த மாதம் 2 வயது பிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பிறந்த பின்னர் தனது அழகும், கவர்ச்சியும், வனப்பும் முற்றிலும் மங்கிப் போய்விடவில்லை என்றும் முன்பை விட மேலும் பொலிவுடன் இருப்பதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார் கிம் என்பது நினைவிருக்கலாம். 34 வயதான கிம், தன்னைப் பற்றி தானே பெருமை கொள்வதாகவும் சந்தோஷமாக கூறுகிறார்.

0 comments:

Post a Comment