Wednesday, May 20, 2015


 சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினிமுருகன் ஜூலை17 அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சுமார் மூன்றுமாதங்களுக்கு மேலாகிவிட்டது.
ஒரு படம் வெளியாகும் நேரத்தில் அடுத்தபடத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்திருப்பது போல முன்னணி நாயகர்கள் பார்த்துக்கொள்வார்கள், ஆனால் சிவகார்த்திகேயன் அந்தவிசயத்தில் அவசரப்படாமல் நிதானமாக இருக்கிறார். அதனால்தான் ரஜினிமுருகன் படத்தைத் தொடர்ந்து அவர் எந்தப்படத்தில் நடிக்கப்போகிறார் என்பது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தச் செய்தியும் சொல்லப்படவில்லை.
இயக்குநர் அட்லியிடம் உதவியாளராக இருந்த பாக்யராஜ் என்பவருடைய இயக்கத்தில் அடுத்தபடத்தில் நடிக்கவிருக்கிறார் என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. அந்தப்படமே இன்னும் தொடங்கவில்லை, அதற்குள் அதற்கடுத்த படம் பற்றியும் இப்போதே பேச்சு வரத்தொடங்கிவிட்டது.
இப்போது அஜித் படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் சிறுத்தைசிவா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பாக்யராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் முடிவடைவதற்கும் அஜித் படத்தை சிறுத்தைசிவா முடிப்பதற்கும் சரியாக இருக்கும், அதன்பின் இருவரும் இணையும் படம் தொடங்கும் என்றும் சொல்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் இப்போதே மாஸ்ஹீரோ அந்தஸ்துக்கு வந்துகொண்டிருக்கிறார், சிறுத்தைசிவா படம் அவரை முழுமையான மாஸ்ஹீரோவாக மாற்றிவிடும் என்றும் இப்போதே ஆருடம் சொல்லத்தொடங்கிவிட்டார்கள். ஆனால் இது குறித்து சிறுத்தைசிவா தரப்பு மற்றும் சிவகார்த்திகேயன் தரப்பு எதுவும் பேசாமல் மௌனம் காக்கிறது.

0 comments:

Post a Comment