Saturday, May 23, 2015



எப்போதும் கவர்ச்சி காட்டமாட்டேன் என்று கொள்கை கொண்டிருந்த ஸ்வீட் ஸ்டால் நடிகை இப்போது தனது கொள்கையைத் தளர்த்திக்கொண்டுள்ளாராம்.

காரணம் தமிழ், தெலுங்கில் மீண்டும் ஒரு ரவுண்ட் வரவேண்டுமானால் ஆடைகளை கொஞ்சம் தியாகம் செய்துதான் ஆகவேண்டும் என்று நலம் விரும்பிகள் செய்த அட்வைஸ்தான் அவரை கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு மாற்றியுள்ளதாம்.

கடந்த ஆண்டு இவர் அளித்த ஒரு பேட்டியில், தென்னிந்திய படங்களில் மட்டுமல்ல இந்தி படங்களில் நடிக்கும்போதுகூட எனக்கென சில கொள்கைகள் வைத்திருக்கிறேன். கிளாமர் வேடங்களில் நடிக்க தயார். இறுக்கமான ஜீன்ஸ், பொருத்தமான குர்தாவில் பெண்களால் கவர்ச்சியாக இருக்க முடியும். ஆனால் கவர்ச்சி என்பதற்காக ஆடைகளை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுபோல் என்னை நடிக்க சொல்லி இயக்குநர் கேட்டாலும் அந்த காட்சியை மாற்றும்படி அவரிடம் கேட்டுக்கொள்வேன், என்று கூறியிருந்தார்.

இப்போது இவரே கவர்ச்சிக்கு ரெடி என்று கூறியுள்ளார். அதுவும் கவர்ச்சி இல்லையென்றால் ஒரு போதும் நடிக்க மாட்டேன் என்றும், இயக்குநர்கள் எந்த ஆடை கொடுத்தாலும் அதைப்போட்டுக்கொண்டு நடிக்க தயார் என்றும் சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

கடந்த மாதத்திற்கு முன்பு ஒரு தெலுங்கு படத்தில் பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு ஆடைகளை அகற்றி கவர்ச்சியில் நடித்துள்ளாராம் இந்த இனிப்பு நடிகை. அதைப்பார்த்த தணிக்கை குழுவினரே அதிர்ந்து போய்விட்டனராம். இவருடைய இந்த ஆடை குறைப்பை பார்த்து திரையுலகத்தினர் அதிர்ச்சியில் உள்ளனராம்.

0 comments:

Post a Comment