பிரபல பாப் பாடகி மடோனா இசை நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள ஹோசல்லா என்ற இடத்தில் நடந்தது. அப்போது மடோனா தன்னுடன் நடனமாடிய டிரேக் என்பரை திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.உதட்டோடு உதடு வைத்து 3 நிமிட நேரம் அவர் தொடர்ந்து முத்தமிட்டார். அப்போது ரசிகர்கள் ஆரவார கோஷமிட்டனர். ஆனால் இந்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மடோனா முத்தமிட்டது குறித்து இணையதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால் இதுபற்றி மடோனா தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.அதில் தன்னை விமர்சித்தவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். நான் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே அப்படி செய்தேன். இதை வேண்டும் என்றே சிலர் விமர்சிக்கிறார்கள். என் மீது பொறாமை கொண்டவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment