Wednesday, May 6, 2015


நெருக்கமானவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்து த்ரிஷா வருண்மணியன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. மற்றவர்களுக்கு 7 ஸ்டார் ஹோட்டலில் விடிய விடிய சரக்கு பார்ட்டி கொடுத்தார், த்ரிஷா.

ஆனால் வருண்மணியனுடன் த்ரிஷாவுக்கு நடக்க இருந்த கல்யாணம் நிச்சயதார்த்ததோடு முடிந்து விட்டது. திருமணத்துக்குப் பிறகும் படங்களில் நடிப்பேன் என்று த்ரிஷா சொன்னதாகவும், அதற்கு வருண்மணியன் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதையும் மீறி த்ரிஷா 4 புதிய படங்களை கமிட் செய்ததாலும் தான் இப்படி ஒரு துயரமான பிரிவு ஏற்பட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

உண்மையில் இந்த விஷயங்கள் மட்டுமே காரணமில்லையாம். வருண் மணியனின் பெர்சனல் நடவடிக்கைகள் த்ரிஷாவுக்கு பிடிக்காமல் போனதும் மிக மிக முக்கிய காரணம் என்கிறார்களாம், த்ரிஷாவுக்கு வேண்டப்பட்டவர்கள்.

என்னதான் நடிகையாக இருந்தாலும் த்ரிஷா நடிக்க வந்த காலத்திலிருந்தே மேல்தட்டு வாழ்க்கை முறைக்கு தன்னை முழுதாக அர்ப்பணித்தவர். அப்படிப்பட்ட அவர் எந்த ஒரு சின்ன விழாவாக இருந்தாலும் ட்ரெஸ் கோடு, மேக்கப் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவார்.

யார் கூட பேசினாலும் மரியாதையாகப் பேசுவது, பொது இடங்களில் அவ்வாறாகவே நடந்து கொள்வது என இருப்பவர். அப்படிப்பட்டவரை வாடி போடி என்று வருண் மணியன் அழைத்தால் கதறி அழாகிறாராம், த்ரிஷா.

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு சில பொது இடங்களில் வருண்மணியன் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து ரொம்பவே அப்செட்டாகி விட்டாராம், த்ரிஷா. இந்த ஒரு விஷயம் தான் இரண்டு பேரும் பிரிய முக்கிய காரணமாம்.

0 comments:

Post a Comment