Sunday, May 17, 2015

ஜெயம் ரவிக்கு அடித்தது அதிர்ஷ்டம் - Cineulagam
ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ஜெயம் ரவி. இவர் கடைசியாக நடித்து வெளிவந்த ஆதி பகவான், பூலோகம் ஆகிய படங்கள் நல்ல பெயரை வாங்கி கொடுத்தாலும், வசூலில் கொஞ்சம் சறுக்கியது.
இந்நிலையில் இவர் நடித்த பூலோகம் படமும் எப்போது ரிலிஸாகும் என்று தெரியாமல் இருக்க, ரவி நடிப்பில் ரோமியோ ஜுலியட், அப்பாடக்கர், தனி ஒருவன் ஆகிய படங்கள் ரிலிஸுக்கு ரெடியாகிவிட்டது.
இந்த 3 படங்களும் கண்டிப்பாக ஹிட் தான் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஏனெனில் அந்தளவிற்கு இப்படங்களில் கமர்ஷியல் மசாலா விஷயங்கள் அதிகம் என்பதால் இவை கண்டிப்பாக ரசிகர்களை கவருமாம். மேலும், தனி ஒருவன் படத்தை தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment