Wednesday, May 13, 2015


உண்மையில் சூர்யாவுக்கு நான் முதலில் சொன்னது வேறு கதை.. ஆனால் மாஸ் படமாக எடுக்கப்பட்டது இன்னொரு கதை என்றார் வெங்கட் பிரபு. 

சூர்யா- நயன்தாரா நடிப்பில் வரும் 29-ம் தேதி வெளியாகவிருக்கும் மாஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் வெங்கட்பிரபு பேசுகையில், "நான் சூர்யா, பிரேம்ஜி, யுவன், ஞானவேல் ராஜா எல்லோரும் ஒரே ஸ்கூலில் படித்தவர்கள். நான் ‘பிரியாணி' படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும்போது, ஞானவேல்ராஜாவிடம் ஒரு ஒன்லைன் கதை சொன்னேன். அதை அவர் கேட்டதுமே, பிடித்துப்போய் உடனே அதை படமாக்க வேண்டும் என விரும்பினார். அதுதான் தற்போது சூர்யாவை வைத்து மாஸாக உருவாகியிருக்கிறது.

ஆனால், நான் ஞானவேல்ராஜாவின் எந்த ஒன்லைனை சொல்லி ஒகே வாங்கினேனோ, அதை படமாக எடுக்கவில்லை. சூர்யா நடிக்கிறார் என்றதும் எனக்கென்று பொறுப்பு அதிகமானது. இந்த படத்தில் ஏதாவது ஒரு கதை இருக்கவேண்டும் என்று எண்ணி முதன்முதலாக ஒரு கதையை உருவாக்கி படமெடுத்துள்ளேன். இந்த படம் குழந்தைகளை கவரும் படமாக இருக்கும். மேலும், சூர்யா ரசிகர்களுக்கும் இது ரொம்பவும் பிடிக்கும்.

அஜித்துக்கு 50-வது படம், கேமராமேன் ஆர்.டி.ராஜசேகருக்கு 25-படம் என நான் ஒரு லேண்ட் மார்க் இயக்குனராக மாறிவிட்டேன். இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

சூர்யாவை வைத்து படம் இயக்கப் போகிறேன் என்றதும், அவருடைய அப்பா சிவகுமார், சூர்யா ரொம்ப கோபக்காரன், பாத்து பத்திரமா நடந்துக்க என்று என்னை பயமுறுத்தினார். ஏற்கெனவே, சூர்யா மீது பயத்தில் இருந்த எனக்கு அது மேலும் பீதியை கொடுத்தது.

ஆனால், சூர்யா அப்படியெல்லாம் கிடையாது. ரொம்பவும் ஜாலியாக எங்களுடன் பழகினார். ஷாட் முடிந்ததும் கேரவன் வேனுக்குள் முடங்கிவிடாமல் எங்களிடம் அமர்ந்து ஜாலியாக பேசி சிரித்து மகிழ்ந்தார். கார்த்தியை விட தற்போது சூர்யா எனக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார்," என்றார்.

0 comments:

Post a Comment