Friday, May 1, 2015

ஐ என்ற மெகா பட்ஜெட் படம் வெளிவந்த பின்பும், விக்ரமுக்கு, விமலுக்கு தருகிற மரியாதையை கூட தருவதில்லை இளம் ரசிகர்களின் கூட்டம். ஒட்டடை பலத்தில் உத்திரம் தொங்குவதைப் போல, இயக்குனர்கள் மற்றும் கதாநாயகிகள் பலத்தில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது அவரது இன்றைய மார்க்கெட். இந்த நிலையில்தான் இந்த கோபதாப குளறுபடிகள்.
‘அரிமாநம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர், மீண்டும் தாணுவுக்கே ஒரு கதை சொன்னாராம். ‘தம்பி…. இந்த கதை எனக்கு பிடிச்சுருக்கு. எந்த ஹீரோவா இருந்தாலும் கதை சொல்லுங்க. நான் படத்தை தயாரிக்கிறேன்’ என்றாராம். இவரும் விக்ரமிடம் கதை சொல்லியிருக்கிறார். முதலில் தாணுவின் கலைப்புலி நிறுவனத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம் விக்ரம். வேலைகளை மளமளவென்று ஆரம்பிக்கிற நேரம் பார்த்து, ‘ஆனந்த்… நான் ஒரு கம்பெனி சொல்றேன். நீங்க அந்த கம்பெனிக்கு படம் பண்ணுங்க’ என்றாராம் விக்ரம்.
சினிமாவில் நன்றிக்கெல்லாம் இடம் ஏது? படக்கென்று கட்சி மாறிவிட்டார் ஆனந்த். விக்ரம் சொன்ன கம்பெனிக்கே படம் பண்ணுவதாக கூறிவிட்டாராம். இது தாணுவிற்கு தெரியவர, விக்ரம் போனது கூட பிரச்சனையில்ல. நல்ல கதையோட வந்த டைரக்டரையும் சேர்த்து தள்ளிக்கொண்டு போயிட்டாரே என்று கவலைப்பட்டாராம்.
பின் குறிப்பு – ஆனந்த் சங்கரின் மனசை கலைத்த அந்த கம்பெனி, கத்தி படத்தை தயாரித்த ஐங்கரன் நிறுவனம்தான்.

0 comments:

Post a Comment