Wednesday, May 13, 2015


என்னை அறிந்தால் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜீத், சிவா இயக்கத்தில் நடிக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இப்படம் அஜீத்56 என்று அழைக்கப்படுகிறது.

இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக சுருதி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு சில தினங்களுக்கு முன்பு தான் சென்னயில் கொல்கத்தா போன்றே செட் போடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

அஜித்திற்கு இந்த படத்தில் என்ன கதாபாத்திரம் என ரசிகர்கள் ஆவலுடம் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

இதில் அஜித்துடன் நிறைய காவல் துறையினர் நிற்பது போல் உள்ளது. இதை வைத்து பார்க்கையில் இந்த படத்திலும் அஜித் போலீஸ் அதிகாரியாகத்தான் நடிக்கிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment