கலையுலக கடவுளிடம் வாழ்த்து பெற்ற பாபி சிம்ஹா
குறும்படங்களின் மூலம் தனது கலையுலக பயணத்தை துவக்கிய நடிகர் பாபி சிம்ஹா, அடுத்தடுத்த பெற்ற வெற்றிகளால் கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க ஸ்டாராக மாறியது மட்டுமின்றி சமீபத்தில் தேசிய விருதும் பெற்றும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழ்நிலையில் கோலிவுட்டின் மிக பிசியான நடிகர் என்றால் அது பாபி சிம்ஹாதான். அவருடைய கால்ஷீட் டைரி முழுவதும் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர் மசாலா படம், உறுமீன், பாம்புச்சட்டை, இறவி, கவலை வேண்டாம், பெங்களூர் டேய்ஸ் படத்தின் தமிழ் ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை பாபி சிம்ஹா நேரில் சந்தித்து ஆசி வாங்கியுள்ளார். தேசிய விருது பெற்றதற்காக ரஜினி, தன்னை வாழ்த்தியதாக பாபி சிம்ஹா தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு 'கடவுளுடன் நான்" என்ற வாசகத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இன்று பாபி சிம்ஹா நடித்த "மசாலா படம்' என்ற படத்தின் புதிய டீசர் ஒன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பாபி சிம்ஹாவுடன் சிவா, கெளரவ், லக்ஷ்மி தேவி, ஹரிணி ரமேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் லக்ஷ்மண் குமார் இயக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்த படம் ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகி வருகிறது.

0 comments:
Post a Comment