Monday, May 4, 2015

ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் நடிக்கும் ரஜினி - வெளிவந்த ரகசியம் - Cineulagam
லிங்கா படத்திற்கு பிறகு ரஜினி ஷங்கர் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏந்திரன் 2 நடிக்க இருப்பதாக இருந்தது. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்குள் ரஜினி, ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கும் செய்தி தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது இந்த இரண்டு படங்களையும் ரஜினி ஒரே நேரத்தில் நடித்துக் கொடுக்க போகிறாராம். அதற்கு காரணம், ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ரஜினி பெரும் தொகையொன்றை இந்த மாதத்துக்குள் கொடுக்க வேண்டியிருக்கிறதாம்.
அதற்காகத்தான் இரண்டு படங்களை ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. படத்துக்காக கிடைக்கும் அட்வான்ஸை வைத்து அந்தக்கடனை அடைக்கவிருக்கிறாராம்.
ரஜினி ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதன் ரகசியம் இதுதான் என்று திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment