ஏ.ஆர். ரஹ்மான் கொடுத்த பார்ட்டி.. ஏன்? எதுக்கு?
ஓ காதல் கண்மணி படத்தின் வெற்றிக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன்னுடைய இசைக்குழுவினர், பாடகர்களுக்கு மிகப்பெரிய விருந்து அளித்து படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'ஓ காதல் கண்மணி' திரைப்படம் ஏப்ரல் 17ம் தேதி வெளியானது. துல்ஹர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இளையதலைமுறையினரைக் கவர்ந்த இந்தப்படத்தின் இசை அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது.
வைரமுத்துவின் இளமையான வரிகள்... ஏ.ஆர்.ரஹ்மானின் இளமையான இசை... மணிரத்னத்தின் இளமை ததும்பும் ஸ்கிரிப்ட் என அனைத்துமே இந்த படத்தில் சரியாக அமைந்ததே வெற்றிக்குக் காரணம் என்று கூறப்பட்டது.
இந்த வெற்றியை ஓ காதல் கண்மணி குழுவினர் ஏற்கனவே கொண்டாடி உள்ளனர். எனினும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது குழுவினருக்கு ஒரு பிரத்யேக விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
ஹோட்டலின் அமைப்பே வித்தியாசமான தோற்றம் கொண்டது. போட் மாடல் இருக்கைகள்... வலை பின்னணி, என அழகான ஒரு இடத்திற்கு அழைத்துப்போய் தனது குழுவினரை அசத்திவிட்டாராம் ஏ.ஆர். ரஹ்மான்.
மென்டல் மனதில், மலர்கள் கேட்டேன், சினாமிகா, ஆட்டக்கார என இளமைத் ததும்பும் பாடல்களுக்கு ட்யூன் போட்ட ஏ.ஆர்.ரஹ்மான் அழகான அந்தப் பாடல்களை பாடிய பாடகர்கள், அழகாய் இசை கோர்வை செய்த என்ஜீனியர்களுக்கு விருந்தளித்து உற்சாகப்படுத்தியுள்ளார்.

0 comments:
Post a Comment