டோலிவுட்டில் தாக்குப்பிடிக்க எனக்கு சமத்து போதாது: டாப்ஸி
தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடிக்கும் அளவுக்கு எனக்கு திறமை இல்லையோ என்று நினைக்கிறேன் என நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிறந்த பஞ்சாபி பொண்ணான டாப்ஸி பண்ணு தெலுங்கு படம் மூலம் நடிகையானார். அடுத்ததாக அவர் காலடி எடுத்து வைத்தது கோலிவுட்டில் தான். ஆம், தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அழகுப் பதுமையாக இருக்கின்ற போதிலும் டாப்ஸிக்கு இன்னும் கோலிவுட்டில் ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லை.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்து வருகிறார் டாப்ஸி. அவர் நடிப்பில் அண்மையில் வெளியான காஞ்சனா 2 சூப்பர் ஹிட்டானது. அந்த மகிழ்ச்சியில் உள்ளார் டாப்ஸி.
எனக்கு நடிக்கத் தெரியும் என்பதை மக்களுக்கு நிரூபிக்க காஞ்சனா 2 படத்தில் கங்கா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியதாகிவிட்டது என்று கூறி சிரிக்கிறார் டாப்ஸி.
என்ன டாப்ஸி தெலுங்கு படங்களில் உங்களை பார்க்க முடியவில்லையே என்று கேட்டதற்கு, என்னை குறை கூறாதீர்கள். நான் தெலுங்கு படங்களில் நடிக்கத் தான் விரும்புகிறேன். நான் தெலுங்கு படம் மூலமே நடிகையானேன் என்று டாப்ஸி கூறியுள்ளார்.
தெலுங்கு திரை உலகினர் என்னைப் பற்றி வேறு விதமாக நினைத்துள்ளனர் என்று நினைக்கிறேன். எனக்கு அரிதாகவே கிராமத்து பெண் கதாபாத்திரம் கிடைக்கும். நான் தெலுங்கில் பிறர் போன்று பல படங்களில் நடிக்கவில்லை. தெலுங்கு திரை உலகில் வலுக்கட்டாயமாக இருக்க முடியாது என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.
டாப்ஸி கடைசியாக கடந்த 2013ம் ஆண்டில் தான் தெலுங்கு படத்தில் நடித்தார். அவர் தற்போது செல்வராகவன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் ஒரு இந்தி படத்திலும் நடிக்க உள்ளார்.
0 comments:
Post a Comment