ஜாக்கிரதையாக முன்னேறும் புலி ...
துப்பாக்கி, ஜில்லா மற்றும் கத்தி என்று ஆக் ஷன் படங்களாக நடித்த விஜய், தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும், புலி படமும் ஆக் ஷன் படமாக இருந்தாலும், அதற்கு இணையாக காமெடி காட்சிகளும் அதிகமாக உள்ளது.
ஆனால், இப்படத்தில் தற்போதைய முன்னணி காமெடியன்களான சந்தானம் மற்றும் சூரி என்று யாரும் இல்லை. அதற்கு பதில், தம்பி ராமைய்யா, இமான் அண்ணாச்சி மற்றும் ரோபோ ஷங்கர் என, ஒரு காமெடி டீம் விஜய்யுடன் இணைந்திருக்கிறது. அதனால், காட்சிகளில் நடிப்பதற்கு முன்னதாக, அக்காட்சியை பற்றி ஒருவருக்கொருவர் விவாதம் செய்து நடித்து அசத்துகின்றனர்.

0 comments:
Post a Comment