Wednesday, May 27, 2015


ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் அமீர்கான், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்திய படம் பி.கே.

இந்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக இந்த படம் திகழ்கிறது. தற்போது மீண்டும் ஒரு புதிய சாதனையை இந்த படம் நிகழ்த்தியுள்ளது. இந்தியா தவிர்த்து பாலிவுட் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருப்பது என்னவோ சீனாவில் தான். கடந்தவாரம் சீன மொழியில் வெளியான பிகே படம் இந்தியாவைக் காட்டிலும், சீனாவில் அதிக திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய மதிப்பில் ரூ.34 கோடியை வசூல் செய்துள்ளது பிகே படம். இந்திய படம் ஒன்று சீனாவில் இவ்வளவு பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி இருப்பது இதுவே முதன்முறை.

0 comments:

Post a Comment