
சூர்யா, நயன்தாரா, சமுத்திரகனி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்’ படம் இம்மாதம் 29ம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. வெற்றி இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த மாதம் 24ம் தேதியன்று வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசரை இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் யு டியூபில் பார்த்து ரசித்துள்ளார்கள்.
0 comments:
Post a Comment