Saturday, May 2, 2015

 புறம்போக்கு பட ஷூட்டிங்கில் ஆர்யா, ஷாம் நடிப்பை ரசித்தேன்: விஜய் சேதுபதி

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடித்துள்ள படம், ‘புறம்போக்கு’. இந்த மாதம் 15-ம் தேதி வெளியாகிறது. 

படம் பற்றி விஜய் சேதுபதி கூறியதாவது:இந்தப் படத்தில் ரயில்வே கலாசியாக நடித்திருக்கிறேன். இப்ப டியொரு கேரக்டரை இதற்கு முன் யோசித்துப் பார்த்ததில்லை. படத்தில் ஆர்யா, ஷாம் நடித்திருந்தாலும் எல்லா கேரக்டருக்குமே முக்கியத்துவம் உள்ளது. ‘புறம்போக்கு’ என்ற தலைப்பு முதலில் எனக்கு வியப்பாக இருந்தது. இருந்தாலும், இயக்குனர் ஜனநாதன் எதையும் காரணத்தோடுதான் வைத்திருப்பார் என நினைத்தேன். அவர் சொன்ன விளக்கம் ஆச்சரியமாக இருந்தது. ‘வாழத் தகுதியான இடம் தான் புறம்போக்கு. ஆனால் நாம் அதை வேறு மாதிரியாக புரிந்து வைத்திருக்கிறோம்’ என்றார். 


படப்பிடிப்புன்போது ஆர்யா, ஷாம் இருவரின் நடிப்பைப் பார்த்து வியந்தேன். கார்த்திகா, வழக்கமான ஹீரோயினாக இதில் வர மாட்டார். துணிச்சலாக கேரக்டரில் அவர் நடித்துள்ளார். இந்தப் படம் கண்டிப்பாக வித்தியாசமான படமாக இருக்கும். பொதுவுடைமை கருத்துக்களும் படத்தில் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

0 comments:

Post a Comment