Monday, May 4, 2015

இவருடன் என்னுடைய ஐந்தாவது படம் இது, ஆனால் சலிக்கவில்லை - பிரபல இயக்குனர் - Cineulagam
ஆரம்பம் படத்தை தொடர்ந்து ஆர்யா, கிருஷ்ணாவை வைத்து விஷ்ணுவர்தன் இயக்கி வரும் படம் யட்சன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறும்போது, யட்சன் இரு நண்பர்களின் நட்பு பற்றிய கதை. இரண்டு புறம்போக்குகளின் கதை. நட்பு மட்டுமல்ல படத்தில் ரொமான்ஸ், ஆக்ஷன், காமெடி போல பல அம்சங்களும் இருக்கும்.
ஐந்தாவது முறையாக ஆர்யாவை நாயகனாக்கி இப்படத்தை எடுத்துள்ளேன். ஆர்யாவை வைத்துப் படம் ஆரம்பிக்கும்போது உள்ள புத்துணர்வு முடிக்கும் போதும் இருக்கும். அந்தளவுக்கு புத்துணர்ச்சியை உணர வைப்பது அவரது ஸ்பெஷல் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment