Saturday, May 23, 2015

fact-about-vijay-awards-4
தமிழ் டிவி சேனல்களில் வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் அமோக ஆதரவை பெற்ற டிவி விஜய் டிவி.
விஜய் அவாட்ஸ் என்ற தமிழ் சினிமாவிற்கு விருது வழங்கும் விழாவை கடந்த 9 வருடங்களாக விஜய் டிவி நடத்தி வருகிறது. இந்த வருடம் விஜய் அவாட்ஸ் நிகழ்ச்சிக்கு ஆரம்பத்திலிருந்தே பிரச்சனை ஏற்பட்டது.
தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஜய் அவாட்ஸ் நிகழ்ச்சிக்கு யாரும் கலந்துக்கொள்ள கூடாது என்று பெரிய நடிகர்கள் அனைவருக்கும் கடைசி நேரத்தில் தடை போடப்பட்டது. பெரிய படங்களை மட்டும் வாங்குவது, சிறு தயாரிப்பாளர்களை மதிக்காத போக்கு, சினிமா நட்சத்திரங்களை வளைத்துபோட்டு இஷ்டத்துக்கு விழா நடத்துவது, நிகழ்ச்சி நடத்துவது என சினிமாவை நன்றாக பயன்படுத்திக்கொள்ளும் உங்கள் சேனல் ஏன் படங்களை வாங்குவதில் சுணக்கம் காட்டுகிறது என்று தயாரிப்பாளர் யூனியன் தரப்பில் இதற்கான காரணம் கூறப்பட்டது.
“விஜய் அவார்ட்ஸ்”. விருதில் இளையராஜா, விருது வாங்காமலே கிளம்பிவிட்டார். விருதில் நடிகர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை, வந்தவர்களும் பாதியிலே கிளம்பிவிட்டார்கள். சில நடிகர்கள் மேடையிலேயே, என்ன இன்னும் ஃபுட்டேஜ் போதவில்லையே என்று கலாய்த்ததும் அரங்கியேறியது. குறிப்பாக, பல நடிகர்கள் பாதியிலேயே வெளியேறியதும் நடைபெற்றது. விழாவில் டிடியின் செயல்பாடுகள் சரியில்லை என பகிரங்கமாக பேசப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபலங்களை பேச விடாமல் டிடி மட்டுமே பேசிக்கொண்டு இருந்தது பலரை முகம் சுழிக்க வைத்தது. இதனால் “விஜய் அவார்ட்ஸ்” விருது விழாவில் டிடியின் செயல்பாடுகள் சரியில்லை என பகிரங்கமாக பேசப்பட்டது. ஏற்கனவே விருதில் பலர் கலந்து கொள்ளவில்லை, டிடியின் செயலால் நிகழ்ச்சியின் நேரம் இழுத்துக்கொண்டே சென்றதால் வந்தவர்களும் பாதியிலே கிளம்பிவிட்டார்கள். இதனால் கோபமடைந்த சேனல் தரப்பு டிடியை கூப்பிட்டு கண்டித்ததோடு காபி வித் டிடி நிகழ்ச்சியையும் நிறுத்தியுள்ளனர். கடைசியாக காபி வித் டிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது “36 வயதினிலே” படத்திற்காக ஜோதிகா தான் அதன் பின் நிகழ்ச்சி நடைபெறவில்லையாம்.
விருது விழாவுக்கு பின் நடிகர்கள், நடிகைகள் நிகழ்ச்சிக்கு அழைத்தால் பெரிதாக கண்டுகொல்வதில்லையாம், தயாரிப்பாளர் சங்கத்தின் பிரச்சனையும் இன்னும் தீர்வுக்கு வராததால் இந்த ஆண்டோடு விஜய் அவாட்சுக்கு முழுக்கு போடா விஜய் டீவி முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் விஜய் டிவி தரப்பு முக்கிய நடிகர்கள் அனைவரையும் தனித்தனியாக தூது அனுப்பி மன்னிப்பு கேட்டு வருகிறதாம். விஜய் டிவியின் இந்த தூது முயற்சி பலிக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment