Sunday, May 3, 2015


திரைப்படங்களில் ரயிலில் ஒருசில காட்சிகள் எடுப்பதற்கே பல பார்மாலிட்டிகள் உண்டு. ரயில்வே துறையில் படப்பிடிப்பு நடத்த சாதாரணமாக அனுமதி கிடைத்துவிடாது. அப்படியே கிடைத்தாலும் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டிய நிலையிருக்கும். எனவேதான் பல திரைப்படங்களில் ரயில் சம்பந்தப்பட்ட காட்சிக்கு செட் போட்டு எடுத்துவிடுவார்கள். இந்நிலையில் ஒரு படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரயிலில் எடுக்கப்பட உள்ளது.

மைனா, கும்கி, கயல் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய பிரபுசாலமன் இயக்கவுள்ள அடுத்த படத்திற்கு தனுஷ்தான் ஹீரோ என்றாலும், இந்த படத்தில் முக்கிய ஹீரோ ரயில்தானாம். படம் முழுக்க கிட்டத்தட்ட ரயிலில் படமாக்கவிருக்கும் பிரபுசாலமன், இந்தியாவில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களுக்கு தனது குழுவினர்களுடன் சென்று எந்தெந்த ரயில் நிலையங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் அந்தந்த ரயில் நிலையங்களில் படப்பிடிப்பு நடத்த அவர் அனுமதியும் பெற்றுவருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ள சத்யஜோதி தியாகராஜன் இந்த படத்திற்காக ரயிலை ஒரு மாதம் வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருமாத ரயிலின் வாடகை மட்டும் ஒருசில கோடிகள் என்றும் செய்திகள் பரவி வருகின்றது.

0 comments:

Post a Comment