பாலிவுட் திரையுலகில் தன் கவர்ச்சியால் பல ரசிகர்களை கவர்ந்தவர் சன்னி லியோன். இவர் மீது எப்போதும் தொடர்ந்து சர்ச்சைக்கள் இருந்தே கொண்டே தான் இருக்கும்.
இந்நிலையில் இவர் மீது மும்பையில் இந்து அமைப்பை சார்ந்த ஒரு பெண் போலிஸில் புகார் கொடுத்துள்ளார். இதில் ’சன்னி லியோனின் இணையதளத்தில் இருக்கும் வீடியோ மற்றும் இதர விஷயங்கள் மக்களிடையே ஆபாசத்தை ஊக்குவிப்பதுடன், இந்திய சமூகத்தையும் கலாச்சாரத்தையும் அழிக்கும் வகையில் இருப்பதால் அவர் பெயரில் இருக்கும் இணையதளத்தை தடை செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
மேலும், இணையதளம் உடனடியாக தடை செய்யப்படாது என்று கூறியுள்ள காவல்துறை, வழக்கை சைபர் க்ரைம் பிரிவுக்கு மாற்றியுள்ளது.
0 comments:
Post a Comment