Sunday, May 3, 2015


சிலந்தி படத்தை தயாரித்த சங்கர் தனது பெயரை ஹிருஷிகேச அச்சுதன் சங்கர் என்று மாற்றிக் கொண்டுள்ளார். இவர் தற்போது கோப்பெரும்தேவி  என்ற படத்தை தயாரித்து இயக்கி உள்ளார்.

கடந்த 3 வருடங்களாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த மாத இறுதியில் வெளியாகிறதாம்.

இதுகுறித்து சங்கர் கூறியதாவது: 

இது ஒரு வரலாற்றை அடிப்படையாக கொண்ட படம். பேய் படம் என்றாலும் அதில் லாஜிக்கும் உண்டு, உண்மை சம்பவங்களும் உண்-டு. கிராபிக்ஸ் பணிகளுக்கு அதிக நாள் தேவைப்பட்டதால் படம் தாமதமாகிவிட்டது.

படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்ற யாரும் தனியாக கிடையாது. எல்லாமே பேய்தான். என்றாலும் ஆராதியா என்ற புதுமுகம் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கோவை சரளா, ஸ்ரீமன், இளவரசு, ஊர்வசி, வி.டி.வி.கணேஷ், சிங்கம்புலி, தேவதர்ஷினி, பாண்டு உள்ளபட 20 காமெடி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

படம் பார்க்க வரும் ரசிகர்களை இரண்டு மணி நேரம் சிரிக்க வைத்து அனுப்ப வேண்டும் என்பது தான் படத்தின் நோக்கம். பயத்துடன் சிரிப்பார்கள் என்பது தான் படத்தின் ஸ்பெஷல், என்று சங்கர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment