Sunday, May 3, 2015

palakkattu madhavanஇன்று மனஅழுத்தம் போக்க செலவில்லாத மருந்து நகைச்சுவைதான். அந்த வகையில் ஒரு ‘நான்ஸ்டாப் காமெடி’ படமாக உருவாகியிருக்கிறது ‘பாலக்காட்டு மாதவன்’. படம் பற்றி இயக்குநர் சந்திரமோஹன் சொல்லும்போது…
படத்தின் தலைப்பு பற்றிக் கூறும் போது ”பாலக்காட்டு மாதவன்’ கே. பாக்யராஜ் அவர்களால் உருவாக்கப்பட்ட பாத்திரம். அது அவ்வளவு தூரம் அனைவரையும் சென்றடைந்தது. அந்த பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்ததால் அதை இந்தப் படத்துக்கு வைத்திருக்கிறேன்..!” என்றார்.
palakkattu madhavanபடத்தின் கதை பற்றிக் கேட்ட போது, “ஒரு சாதாரண மனிதனின் கதைதான் இது. அவன் ஒரு அம்மாவைத் தத்தெடுக்கிறான். அதன் பிறகு வரும் பிரச்சினைகள், சுவாரஸ்ய சம்பவங்கள்தான் கதை. மகனாக விவேக்கும் அம்மாவாக செம்மீன் ஷீலாவும் நடித்துள்ளனர்..!” என்ற இயக்குநர் சந்திரமோஹன் “ஏற்கெனவே ஸ்ரீகாந்த்தேவா இசையில் ஆடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வயிறு குலுங்க விலாநோக சிரிக்க வைக்கும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது..!” என்கிறார்.
விரைவில் ‘பாலக்காட்டு மாதவன்’ படம் வெளியாகவுள்ளது..!

0 comments:

Post a Comment