
ஜோதிகா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகமெங்கும் வெளியானது 36 வயதினிலே. இப்படத்தை 3 போலிசும் ஒரு கைதியும் திரையரங்கில் பார்த்த சுவையான சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது.
இரு சக்கர வாகனங்களைத் திருடும் கும்பலைச் சார்ந்தவர் என சொல்லப்பட்ட மதன் என்பவரை கடந்த சனிக்கிழமை இரவு 10 மணிக்கு போலீஸார் விசாரித்து வந்தனர். மணி 10.30 ஆனதும், காவல் நிலையத்தில் வைத்திருக்க முடியாது என்பதால், கை விலங்குடன் மதனை ஜீப்பில் ஏற்றி ரவுண்ட்ஸ் வந்தனர்.
அப்போது அங்குள்ள திரையரங்கு ஒன்றில் '36 வயதினிலே' திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. சிறப்பு Sub -Inspector அழகேசன், தலைமைக் காவலர் ஞானபிரகாசம், ஜீப் டிரைவர் ராமச்சந்திரன் ஆகிய மூவரும், விசாரணைக் கைதியுடன் படம் பார்த்தனர்.
கைவிலங்குடன் மதன் படம் பார்ப்பதைக் கண்ட பொதுமக்கள் வாட்ஸ் அப்பில் தகவலைப் பரப்பினர். இத்தகவல் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திர நாயர், டி.எஸ்.பி. சீத்தாராமன் ஆகியோரருக்கு சென்றது.
இதை அறிந்த மேல் அதிகாரிகள் அந்த மூன்று போலிசையும் தற்காலிக நீக்கம் செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment