தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரண்டே குறும்படங்கள் தான். இந்த குறும்படத்திலிருந்து பல இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் வெள்ளித்திரையில் கலக்கி வருகின்றனர்.
அந்த வகையில் கலகலப்பு, பீட்ஸா, சூது கவ்வும், ஜிகர்தண்டா போன்ற பல படங்களில் காமெடியில் கலக்கிய கருணாகரன் 3 வருடங்களில் 25 படங்களில் நடித்துள்ளார். இதற்காக தமிழக ரசிகர்களுக்கு தன் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
மேலும், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, கலகலப்பு படத்தில் நடிக்க வைத்தது மட்டுமில்லாமல் திரைக்கதை அமைக்க சொன்ன சுந்தர்.சி, லிங்கா படத்தில் நடிக்க அழைத்த கே.எஸ்.ரவிக்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் அனைவருக்கும் தன் நன்றியை தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment