Friday, May 15, 2015


சிங்கம், சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து தற்போது சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான சிங்கம் 3 படம் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாம். இயக்குனர் ஹரி நடிகர் சூர்யாவை வைத்து எடுத்த சிங்கம் படம் மாபெரும் வெற்றி பெற்றததைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான சிங்கம் 2 இரு ஆண்டுகளுக்கு முன்னர் வந்து வெற்றி பெற்றது . இதனைத் தொடர்ந்து சிங்கம் 3ம் பாகத்தை எடுக்க இருவரும் இணைகிறார்கள். ஷூட்டிங் விரைவில் தொடங்கப் பட உள்ளது. முழுக் கதையையும் எழுதி முடித்த ஹரி செப்டம்பரில் படத்தை முடித்து வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.

சிங்கம் படத்தில் துரை சிங்கம் என்ற கதாபாத்திரத்தில் போலீசாக நடித்த சூர்யாவுக்கு அது பெரிய பிரேக்கைக் கொடுத்தது. தொடர்ந்து 2ம் பாகத்திலும் நடிக்க வைத்தது.


சிங்கம் படம் தமிழ் பட உலகில் புகழின் உச்சத்திற்கு சூர்யாவை கொண்டு சென்றது. சூர்யாவிற்கு கலெக்சன் நாயகன் என்ற பெயரையும் இந்தப் படம் வாங்கிக் கொடுத்தது.

மேலும், இந்தி சிங்கம் படத்தில் அஜய் தேவ்கனும், கன்னட படத்தில் சுதீப்பும் பெங்காலி மொழியில் ஜீத் என்பவரும் துரை சிங்கங்களாக மாறி கர்ஜிக்க எல்லா மொழிகளும் படம் வெற்றி பெற்றது.

தற்போது அஞ்சான் படம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து சூர்யாவின் மார்க்கெட் சரிந்துள்ளது. சரிந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் நோக்கத்தில் தான் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறுகிறார்கள்.

முதல் இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்த அனுஷ்காவிற்குப் பதில் சிங்கம் 3 படத்தில் நடிகை சுருதி ஹாசன் நடிக்க உள்ளாராம்.

முதல் இரண்டு படங்களில் இசை அமைத்த தேவி ஸ்ரீ பிரசாதிற்குப் பதில் இந்தப் படத்தில் "கொலைவெறி" அனிருத் இசை அமைக்கிறார்.

நடிகர் சூர்யாவுடன் ஏழாம்அறிவு படத்தில் நடித்த ஸ்ருதி அவருடன் இரண்டாவது முறையாக இணைகிறார். இதே போல இயக்குனர் ஹரியின் பூஜை படத்தில் நடித்த ஸ்ருதி ஹரியுடனும் 2வது முறையாக இணைகிறார். கொஞ்ச நாளா மறந்திருந்த ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெய்ட்ரா டயலாக்கை மறுபடியும் காது வலிக்க வலிக்க கேக்கனுமா?

0 comments:

Post a Comment