Saturday, May 16, 2015


என்னை அறிந்தால் படத்தை அடுத்து அஜீத், சிவா இயக்கத்தில் நடித்து வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஸ்ருதிஹாசனுக்கு இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்று கூறப்பட்டது. இந்த கேரக்டரின் தன்மையை கேட்டபின்னர் தான், அவர் நாகார்ஜுனா -கார்த்தியின் படத்தில் இருந்தே தைரியமாக விலகி வந்தாராம்.

இந்நிலையில் திடீர் மாற்றமாக இந்த படத்தில் இன்னொரு ஹீரோயினை புக் செய்ய சிறுத்தை சிவா முடிவு செய்துள்ளாராம். அதுவும் அந்த கேரக்டரில் நடிக்கவுள்ளவர் பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஒரு கவர்ச்சி நாயகி என்று கூறப்படுகிறது.

இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ள ஸ்ருதிஹாசன், அந்த நடிகைக்கு தன்னால் ஈடுகொடுக்க முடியுமா? என்ற கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த நடிகையின் வரவால் தன்னுடைய கேரக்டரை டம்மியாக்கிவிடுவாரோ டைரக்டர் என்ற அச்சத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பாலிவுட் முன்னணி நடிகை யார் என்று குழம்பி வருபவர்களுக்காக ஒரு க்ளூ. அவருடைய பெயர் மல்லிகையில் ஆரம்பிக்குமாம்.

0 comments:

Post a Comment