Saturday, May 16, 2015


கடந்த ஏப்ரல் மாதம் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த மலையாளப்படம் பாஸ்கர் தி ராஸ்கல் இந்தப் படத்தை சித்திக் இயக்கி இருந்தார்.

பாஸ்கரன் பிள்ளை என்ற தொழில் அதிபரைப் பற்றிய கதை இது. பாஸ்கர் தி ராஸ்கல் படத்தைப் பார்த்த ரஜினிக்கு அந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்து நடிக்கும் எண்ணம் வந்திருக்கிறது.

உடனடியாய் அந்தப் படத்தின் ரைட்ஸை வாங்க ஏற்பாடு செய்திருக்கிறார். ஏற்கனவே அதை தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ் வாங்கி வைத்திருப்பது தெரிய வர, அவரை அழைத்துபேசி இருக்கிறார், ரஜினி.

கம்பீரம், தென்காசிப்பட்டணம், சதுரங்கம் படங்களைத் தயாரித்து தற்போது நலிவுற்று இருக்கும் துரைராஜ், பாஸ்கர் தி ராஸ்கல் ரைட்ஸை தர முடியாது, வேண்டுமானால் நீங்கள் நடியுங்கள்.. நான் தயாரிக்கிறேன் என்று சொல்ல, ரஜினியும் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து பெரும் தொகையை பைனான்சியரிடமிருந்து வாங்கி, ரஜினிக்கு அட்வான்ஸ் கொடுக்கத்தயாராகி இருக்கிறார், துரைராஜ். இதற்கிடையில் பா.ரஞ்சித், ரஜினியின் அடுத்தப் படத்தின் கால்ஷீட்டை வாங்கிவிட்டார். இதனால் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறாராம், எஸ்.எஸ்.துரைராஜ்.

0 comments:

Post a Comment