
லிங்கா படத்தையடுத்து ரஜினி எந்த படத்தில் நடிப்பார் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
தற்போது ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் 100% உண்மையாகி விட்டது. இருப்பினும் ரஜினி இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனிடையில் சமீபத்தில் மலையாள மொழியில் வெளியான பாஸ்கர் த ராஸ்கல் படத்தை பார்த்த ரஜினி இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் முடிவை எடுத்துள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் கோலிவுட்டில் ரசிகர்கள் ரஜினியால், மம்மூட்டியை போல் நடிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஒரு வேளை ரஜினி அந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் ரசிகர்கள் அதை ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று கூறி வருகிறது கோலிவுட் வட்டாரம்.
இன்னொருவரின் மனைவியான நயன்தாராவை கல்யாணம் பண்ணி கொள்ளுவது, அதோடு படம் முழுவதும் குழந்தைகளை முன் வைத்தே நகர்கிறதாம். இப்படத்தில் வயதானவர் போல் நடித்திருக்கிறாராம் மம்மூட்டி. அதனால் ரஜினிக்கு இந்த கதை எடுப்படாது என்கிறார்கள்.
0 comments:
Post a Comment