Wednesday, May 6, 2015


நடிகர் சல்மான் கானுக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அறிந்து இதயமே நொறுங்கியது போல உணர்கிறேன் என்று நடிகை ஹன்சிகா மோத்வானி கூறியுள்ளார். நடிகர் சல்மான் கான் வழக்கில் அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது, தண்டனை விதிக்கப்பட்டது பாலிவுட்டைச் சேர்ந்த பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பல நடிகர்,. நடிகையர் சல்மான் கானின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல டிவிட்டரிலும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகை ஹன்சிகா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘இதயமே நொறுங்கியது போல உள்ளது. பேச வார்த்தை இல்லை. சல்மான் கான் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்' என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment