Wednesday, May 6, 2015


சல்மான் கான் கார் விபத்து வழக்கி்ல் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறித்து நடிகை சோனாக்ஷி சின்ஹா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். சல்மான் கான் நடித்த தபாங் படத்தில் நடித்து இந்தி சினிமாவில் அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார்.

தபாங் படத்தின் மூலம் கிடைத்த புகழைத் தொடர்ந்து இந்தியில் பிரபலமானார் சோனாக்ஷி. தமிழிலும் கூட அவர் லிங்கா படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சல்மான் கான் வழக்கு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் சோனாக்ஷி. அதில் அவர் கூறியிருப்பதாவது:


"மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி. சல்மான் கானுக்கு ஆதரவாக இருப்போம் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. சல்மான் கான் நல்ல மனிதர். அந்த குணத்தை அவரிடமிருந்து யாரும் எடுக்க முடியாது" என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார் சோனாக்ஷி சின்ஹா.

0 comments:

Post a Comment