விஜய் கொடுத்த மறக்க முடியாத பரிசு. நந்திதா
விஜய் நடித்து வரும் 'புலி' படத்தில் அட்டக்கத்தி நாயகி நந்திதா சமீபத்தில் நடித்து முடித்தார் என்பதை பார்த்தோம். 'புலி' படத்தில் நடித்த அனுபவம் தனக்கு மிகவும் வித்தியாசமாக இருந்ததாக நந்திதா கூறியிருந்த நிலையில் நேற்று நந்திதா தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் உரையாடினார்.
அப்போது ஒரு ரசிகர் 'புலி' படத்தில் நந்திதா கேரக்டர் குறித்த கேட்டபோது அதற்கு பதிலளித்த நந்திதா, 'இதுவரை நான் நடித்த கேரக்டர்களிலே பெஸ்ட் கேரக்டர் 'புலி' படத்தில் நடித்த கேரக்டர்தான். அதுமட்டுமின்றி இனிமேலும் எனக்கு இதுபோன்ற கேரக்டர் மீண்டும் கிடைக்குமா? என்பது சந்தேகமே? என்று கூறியுள்ளார்.
மேலும் புலி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது என்னுடைய பிறந்த நாளை படக்குழுவினர் சஸ்பென்ஸாக வைத்திருந்து கொண்டாடியதாகவும், குறிப்பாக விஜய் கொடுத்த பிறந்த நாள் பரிசு என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பரிசாக அமைந்தது' என்று நந்திதா கூறியுள்ளார்.
'புலி படம் தவிர தற்போது நந்திதா 'இடம் பொருள் ஏவல், அஞ்சலை, உப்புக்கருவாடு ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment