தல 56 படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் சென்னையில் தொடங்கவுள்ளது. நாளை தான் படப்பிடிப்பு தொடங்குவதாக முதலில் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தயாரிப்பாளரின் வியாழக்கிழமை செண்டிமெண்ட்க்கு மதிப்பு கொடுத்து நாளை மறுநாள் தொடங்குகின்றனர்.
கதைப் படி கதாநாயகன் கொல்கத்தாவில் வாழும் ஒரு இளைஞன். ஆதலால் கொல்கத்தாவில் தான் அதிக காட்சி பகுதிகள் உள்ளன.
ஆனால் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடத்தினால் அதிக செலவு கூடும். அதுவும் இல்லாமல் எல்லாருக்கும் அலைச்சல் தான் என்று எண்ணி சென்னையில் கொல்கத்தா மாதிரியான மிகப்பெரிய அரங்கு ஒன்றை அமைத்துள்ளனர்.
அங்கு தான் படத்தின் முக்கிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதற்கு முன் மணிரத்னத்தின் நாயகன் படத்துக்கு தான் சென்னையிலே மும்பை மாதிரி செட் அமைத்து பல முக்கிய காட்சிகளை எடுத்து இருந்தனர். அதற்கு பிறகு தல 56 படத்தில் இந்த முயற்சி செய்துள்ளனர்.
பின்னி மில்லில் அமைத்து இருக்கும் செட்டை பார்த்தால் அசல் கொல்கத்தா போலே இருக்கிறதாம்.
0 comments:
Post a Comment