Sunday, May 3, 2015

மாஸாக வெளியாகிறது யுவனின் மாஸ் பட பாடல்கள் - Cineulagam
அஞ்சான் படத்திற்கு பிறகு சூர்யா அடுத்து நடித்து வரும் படம் மாஸ். வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படத்தில் நாயகிகளாக நயன்தாரா மற்றும் ப்ரணீதா நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வழக்கம் போல் வெங்கட் பிரபுவின் சாய்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தான். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 8ம் தேதி மாஸாக நடைபெற இருக்கிறது.
இந்த செய்தியால் யுவன் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சூர்யா ஏற்கெனவே தனது டுவிட்டர் பக்கத்தில், மாஸ் படத்தில் எனக்கு அனைத்து பாடல்களும் பிடித்திருக்கிறது, அதிலும் பிறவி என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறியிருந்தார்.
படம் அனேகமாக மே 22ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment