Sunday, May 17, 2015

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜோதிகா படைத்த சாதனை - Cineulagam
இந்திய சினிமாவில் சிறந்த 10 நடிகைகள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் கண்டிப்பாக அதில் ஜோதிகாவும் இடம்பெறுவார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து 10 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து, பின் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார்.
இதற்கு பிறகு இவர் எப்போது நடிக்க வருவார் என காத்திருந்த தமிழக ரசிகர்களுக்கு விருந்தாக 8 வருடங்கள் கழித்து 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படம் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டு வருகின்றது.
அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் வந்த தகவலின் படி இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு பெண்கள் கூட்டம் இப்படத்திற்கு அலை மோதுகிறதாம். 6லிருந்து 60வரை அனைத்து தரப்பு பெண் ரசிகர்களும் இப்படத்தை புகழ்ந்து வருகின்றனர். இவை அனைத்திற்கு ஒரே காரணம் ஜோதிகாவின் நடிப்பு மட்டுமே.
தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் துல்லியமாக தனக்கே உரிதான ஸ்டைலில் நடித்து கலக்கியுள்ளார். பெண்களை திரையரங்குகளுக்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு அழைத்து வந்ததற்காகவே இப்படக்குழுவினர்களை மனம் விட்டு பாராட்டலாம்.

0 comments:

Post a Comment