இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர் ஷங்கர். இவர் தன் பிரமாண்ட படைப்புக்களால் பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த ஐ திரைப்படம் கூட ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
இவர் அடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் எந்திரன்-2 வில் இணையவிருக்கின்றார் என கூறப்பட்ட நிலையில், பாலிவுட் ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமிதாப் பச்சன், ரன்தீப் இணையும் ஒரு சரித்திர படத்தை ஷங்கர் எடுக்கவிருக்கின்றார் என கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
0 comments:
Post a Comment