Friday, May 15, 2015


குணசேகரன் இயக்கத்தில் அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா, நித்தியா மேனன், கேத்ரீன் தெரசா போன்ற பலர் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகிவரும் படம் "ருத்ரமாதேவி". 

இப்படத்தில் அனுஷ்கா, நித்தியா மேனன், கேத்ரீன் தெரசா மூவருக்கும் ஒரு அழகான பாடல் உண்டு. அதாவது அரண்மனையில் நான்கு தோழிகள் ஆடிப்பாடி மகிழ்வது போன்ற அப்பாடலில் நித்யா மேனன் உயரம் குறைவு என்பதால், அனுஷ்கா அவருக்காக சற்று குனிந்தே நடித்துள்ளாராம். 

இதனால் நித்யா மேனன் அனுஷ்காவை எந்தப் பேட்டியிலும் புகழ்ந்து தள்ளுகின்றாராம். அவர் ஒரு பேட்டியில் :- "நான் என் வாழ்வில் சந்தித்த மிகச்சிறந்த நபர்களில் அனுஷ்காவும் ஒருவர். எனக்கும் அவருக்கும் பல விஷயங்களில் ஒத்துப் போகின்றன." என அவர் கூறியுள்ளார். இந்தப்படம் ஜூன் மாதம் வெளியிடப்படவுள்ளது. 

0 comments:

Post a Comment