சந்தானத்தை ஓவர்டேக் செய்த பிரேம்ஜி
கடந்த சில நாட்களுக்கு முன் நாகா வெங்கடேஷ் இயக்கத்தில் நகுல் நடித்து வெளிவந்த படம் நாரதன். இப்படத்தில் இன்னொரு ஹீரோ போன்ற காமெடி ரோலில் சந்தானம் தான் நடிப்பதாக இருந்ததாம்.
ஆனால், முதலில் நடித்துத்தருவதாக சொல்லியிருந்த சந்தானம், பின்னர் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதால் கால்சீட் பிரச்னை என்று சொல்லி அந்த படத்தில் இருந்து விலகிக்கொண்டாராம்.
அதன்பின், அவர் இடத்துக்கு யாரை நடிக்க வைக்கலாம் என்ற போது பிரேம்ஜி சரியாக இருப்பார் என்று அவரை கமிட் பண்ணினார்களாம். ராதாரவியின் காம்பினேஷனில் பிரேம்ஜி காமெடி காட்சிகளில் நடித்துள்ளாராம்.
இதுபற்றி அப்படக்குழுவினர் சொல்லும்போது, ஏற்கனவே அவர் நடித்த படங்களில் காமெடி ஒர்க்அவுட்டாகியிருந்தபோதும் இந்த படத்தில் இன்னும் நன்றாக ஒர்க்அவுட்டாகியிருக்கிறது. சொல்லப்போனால், சந்தானம் நடித்திருந்தால் இந்த அளவுக்கு நடித்திருப்பார் என்று சொல்ல முடியாது. அந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார் பிரேம்ஜி என்கிறார்கள்.

0 comments:
Post a Comment