பெஸ்ட் குடும்ப தலைவி ஜோதிகா - அண்ணியின் புகழ் பாடும் கார்த்தி
ஜோதிகா 8 வருடங்களுக்கு பிறகு 36 வயதினிலே படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகியிருக்கிறார். சூர்யா மனைவியின் ரீ என்ட்ரியில் அதிக அக்கறை காட்டி வருகிறார். படத்தை தியேட்டர்களில் பார்த்து ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை கவனிக்கிறார்.
ஜோதிகா ரீ என்ட்ரி பற்றி சூர்யா கூறும்போது, ஜோவின் முயற்சி வெற்றி அடைய பிரார்த்தனை செய்கிறேன். ரசிகர்கள் ஆதரவு கிடைத்துவிட்டால் இதற்கு மேல் வேறென்ன வேண்டும் என்று கூறுகிறார்.
ஜோதிகாவின் கொழுந்தனார் கார்த்தி இணைய தள பக்கத்தில் 8 வருடங்கள் அர்ப்பணிப்புடன் கூடிய அம்மாவாகவும், திறமையான குடும்ப தலைவியாகவும், உடல் நலன் பாதுகாப்பு ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார் எனது அண்ணி (ஜோதிகா). அவரது குண நலன்களை மற்ற பெண்களும் கடைபிடிக்கலாம் குடும்ப தலைவி சந்தோஷமாக இருந்தால் அந்த குடும்பமே சந்தோஷமாக இருக்கும். ரீ என்ட்ரி படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். ஆல் த பெஸ்ட் அண்ணி என குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment