Tuesday, May 5, 2015


விஜய்சேதுபதி, ஆர்யா, ஷ்யாம் மற்றும் கார்த்திகா நடிக்கும் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படம் மே 15ல் வெளியாகிறது. ஈ, இயற்கை, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். 

விஜய் சேதுபதி இப்படத்தில் எமலிங்கம் என்ற பெயரில் ரயில்வே தொழிலாளராக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக கார்த்திகா நடித்துள்ளார். இப்படத்திற்காக  உடல் எடையை அதிகரித்துள்ளார் விஜய்சேதுபதி.
வித்தியாசமான கதைத்தளம் மட்டுமில்லாமல் சமுகத்திற்கான கருத்தம்சமுள்ள திரைப்படம் என்பதாலும், எந்த கதாநாயகனும் செய்யாத கதாப்பாத்திரம் ரயில்வே தொழிலாளி வேடம் என்பதால் தான் தேர்ந்தெடுத்ததாகவும் கூறியுள்ளார் விஜய்சேதுபதி. 

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் 36வயதினிலே படமும் மே15ல் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment