Tuesday, May 5, 2015


இசையமைப்பாளர் இமான் முதன்முறையாக மலேசியாவில் மேடைஇசைக்கச்சேரி நடத்தினார். மே 2 ஆம் தேதி நடந்த அந்தக்கச்சேரியில் கலந்துகொள்ள தமிழ்த்திரையுலகிலிருந்து பலரைக் கூப்பிட்டிருக்கிறார்கள்.
ஆனால் அங்கு சென்று கலந்துகொண்டது சிவகார்த்திகேயனும் விக்ரம்பிரபுவும் மட்டும்தான். சிவகார்த்திகேயனை பின்னணிப்பாடகராகவும் மாற்றியது இமான்தான். அந்த நன்றிக்காக நிகழ்ச்சியில் கலந்துகொண்டதோடு மேடையில் ஒரு பாடலையும் பாடினாராம் சிவகார்த்திகேயன்.
வருத்தப்படாதவாலிபர்சங்கம் படத்தில் இடம்பெற்ற வருத்தப்படாதவாலிபர்சங்கம் என்கிற பாடலை சிவாகர்த்திகேயன் பாடியபோது ஒட்டுமொத்த அரங்கிலும் பெரிய வரவேற்பு இருந்ததென்று சொல்கிறார்கள். அதனால் உற்சாக மிகுதியில் இமான் நடனம் ஆடத்தொடங்கிவிட்டாராம்.
நடனமாடுகிறவர் பாட்டுப்பாடியதும் பாட்டுப்பாடுகிறவர் நடனமாடியதும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்று சொல்கிறார்கள். நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்ததற்கு சிவகார்த்திகேயன் மற்றும் விக்ரம்பிரபுவுக்கு மிகவும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருக்கிறார் இமான். 

0 comments:

Post a Comment