Tuesday, May 5, 2015

 ரஜினிக்காக சூர்யாவுக்கு டைரக்டர் கல்தா

ரஜினி நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க உள்ளார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது மற்றொரு இயக்குனர் இதில் தலையை நுழைத்திருக்கிறார் என கூறப்படுகிறது. ஷங்கருடன் ரஜினி இணையவுள்ள புதிய படம் பெரிய பட்ஜெட்டில் படமாக உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்குள் வேறொரு படத்தை நடித்து முடிக்க ரஜினி எண்ணி உள்ளதாக தெரிகிறது. அப்படத்தை ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ படத்தை இயக்கிய ரஞ்சித் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ரஞ்சித் இயக்கிய இரண்டு படங்களும் வட சென்னையை மையமாக கொண்ட கதைக்களங்களாக உருவானது. ரஜினி படம் மற்றொரு பரிமாணத்தில் வேறுவொரு புதிய களத்தில் உருவாக உள்ளதாம். ரஞ்சித்துடன் கடந்த படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களே இதிலும் பணியாற்ற உள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க உள்ளார். முன்னதாக சூர்யாவின் படமொன்றை இயக்க ஒப்புக்கொண்டிருந்தார் ரஞ்சித். ரஜினி படம் இயக்க உள்ளதால் சூர்யா படத்தை அவர் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment